NEWS :
TRBNEWS Welcomes You

05 September 2012

மண்டலத்தில் 11 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

கோவை, : கோவை மண்டலத்தில் 11 ஆசிரியர்களுக்கு இந்தாண்டு நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.
ஆண்டு தோறும் செப்டம்பர் 5ம் தேதி முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலும், தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
கோவை மண்டலத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 6 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர். சீனிவாசபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்  பெரியநாயகம் (பொள்ளாச்சி), அரசூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி ( பொள்ளாச்சி), ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ரத்தினமூர்த்தி ( பொள்ளாச்சி), ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சரஸ்வதி (காரமடை),  வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சாமிநாதன் , வைசியாள் வீதி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கிருஷ்ணவேணி ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்.
மேலும் ஆனைமலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம், ராமநாதபுரம்  மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமதாஸ், கல்வீராம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன், கணபதி சி.எம்.எஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர் செரிஷ், தேவம்பாடி காளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரேணுகா தேவி ஆகியோர் உட்பட கோவை மண்டலத்தில் 11 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதை பெறுகின்றனர்.
இது குறித்து நல்லாசிரியர் விருது பெறும் கல்வீராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “  ஆசிரியர் பணி என்பது மிகவும் அருமையான பணி. சமூகத்தை நல்ல வழியில் கொண்டு செல்லும் பொறுப்பு எங்களிடம் உள்ளது என்று சொல்வதற்கு மிகவும் பெருமையாக உள்ளது. 1981 முதல் இந்த ஆசிரியர் பணியை செய்து வருகிறேன். கடந்த 2006 ல் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றேன் அதை தொடர்ந்து 2010ல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றினேன். எதிர்கால இந்தியாவை உருவாக்குவதில் எனது பங்களிப்பும் உள்ளது என்று நினைக்கும் பொழுது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நல்லாசிரியர் விருதுக்கு என்னை தேர்வு செய்தமைக்கு நன்றி“  என்றார்.
ராமநாதபுரம்  மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமதாஸ் கூறுகையில், “  கடந்த 33 ஆண்டுகளாக இந்த ஆசிரியர் பணியில் இருக்கிறேன். மிகவும் ஆத்மார்த்தமான பணி இது. ஒரு பொழுதும் இதில் சலிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஒவ்வொரு வருடமும் புது புது மாணவர்களை காண்கிறோம். மாணவர்களின் குறும்புகளையும் ரசிக்கும் ஆசிரியர்கள் நாங்கள். மாணவர்களுடன் அதிக நேரம் செலவிடுவதால் இளமையாக உணர்கிறேன். இந்த விருதுக்கு எனது நன்றி “ என்றார்.

No comments:

Post a Comment

முக்கிய குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு tntrbnews@gmail.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.