NEWS :
TRBNEWS Welcomes You

07 September 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை, செப்.,7:  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்றும், நாளையும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. ஆசிரியர் தகுதித்தேர்வு இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற 1,735 பேருக்கு இன்றும், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற 713 பேருக்கு நாளையும் சான்றிதழ் சரிபார்ப்பு நடை பெறுகின்றது. சென்னை, சேலம், திருச்சி, மதுரை ஆகிய நான்கு இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.  

எடுத்து வர வேண்டிய ஆவணங்கள்: முதல் தாள், இரண்டாம் தாளில் வெற்றி பெற்றவர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, அழைப்புக் கடிதங்களைக் கொண்டு வர வேண்டும். 

முதல் தாளில் வெற்றி பெற்றவர்கள்: எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ஆசிரியர் பட்டயத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள், தமிழ் வழியில் முன்னுரிமை கோருபவர்கள் தமிழ் வழி பயின்றதற்கான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை (புதுப்பிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்), மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அதற்குரிய சான்றிதழ், நடத்தைச் சான்றிதழ் ஆகியவற்றை உடன் எடுத்து வர வேண்டும். 

இரண்டாம் தாளில் வெற்றி பெற்றவர்கள்: எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், இளநிலைப் பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள், பி.எட். மதிப்பெண் சான்றிதழ், தமிழ் பண்டிதர்களாக இருந்தால் அந்தத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ், தமிழ் வழியில் முன்னுரிமை கோருபவர்கள் அதற்கான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அதற்கான சான்றிதழ், நடத்தை சான்றிதழ் ஆகிய ஆவணங்களை உடன் கொண்டு வர வேண்டும். அனைத்தும் அசல் சான்றிதழ்களாக இருக்க வேண்டும். 

4 மண்டல அதிகாரிகள் நியமனம்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் இந்தப் பணிகளில் ஈடுபடுகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் இந்தப் பணியை மேற்பார்வையிட 4 மண்டலங்களுக்கும் தலா ஓர் மண்டல அதிகாரி வீதம் 4 மண்டல அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அதன் விவரம் (மண்டலம், மாவட்டங்கள், மண்டல அதிகாரி, நடைபெறும் இடம்):1. கோவை மண்டலம் - கோவை, ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி - ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் எஸ்.அன்பழகன் - ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, குகை, சேலம்.2. சென்னை மண்டலம் - சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர்,திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் - ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் க.அறிவொளி - ஜெய்கோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, சென்னை.3. திருச்சி மண்டலம் - அரியலூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, கரூர் - ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ஏ.சங்கர் - அனைவருக்கும் கல்வித் திட்ட கருத்தரங்க அறை, திருச்சி.4. மதுரை மண்டலம் - கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி - ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர் எஸ்.சேதுராமவர்மா - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மதுரை.

No comments:

Post a Comment

முக்கிய குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு tntrbnews@gmail.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.