சிவகங்கை: தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற குரூப்-2
தேர்வுக்கான வினாத்தாள் முன்பாகவே வெளியானதால், அந்தத் தேர்வை
டி.என்.பி.எஸ். ரத்து செய்த நிலையில், அதற்கான மறுதேர்வு நவம்பர் 4ம் தேதி
நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், காலியாக உள்ள
நகராட்சி கமிஷனர், உதவி பிரிவு அலுவலர், உதவி வேலைவாய்ப்பு அலுவலர்
உள்ளிட்ட 3,631 பணியிடங்களுக்கு, குரூப்- 2 தேர்வு கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி
நடந்தது. இதில், 6.40 லட்சம் பேர் பங்கேற்றனர்.
இத்தேர்விற்கான வினாத்தாள் ஈரோட்டில் ஒரு தேர்வு மையத்தில் வெளியானது.
வினாத்தாள் வெளியானதால், இத்தேர்வினை, டி.என்.பி.எஸ்.சி., ரத்து செய்தது.
இத்தேர்விற்கென, புதிதாக வினாத்தாள்களை டி.என்.பி.எஸ்.சி., மீண்டும்
தயாரித்துள்ளது.
இந்த வினாத்தாளின் படி, நவம்பர் 4ம் தேதி மீண்டும் தேர்வு நடக்கும் என
அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, செய்யுமாறு, கலெக்டர்களுக்கு,
டி.என்.பி.எஸ்.சி., உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி., அதிகாரி ஒருவர் கூறியதாவது: வினாத்தாள்
"அவுட்&' ஆனதால், மீண்டும் அதே பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 6.40
லட்சம் பேருக்கு மட்டும், நவம்பர் 4ம் தேதி தேர்வு நடக்கிறது. இதில்,
புதிதாக விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுதகூடாது.
ஆகஸ்ட் 12ல் நடந்த தேர்விற்கு இணையதளத்தில் "டவுன்லோடு&' செய்த,
ஹால் டிக்கெட்டை பயன்படுத்தி, அதே தேர்வு மையங்களில், மீண்டும் தேர்வினை
எழுதலாம், என்றார்.
No comments:
Post a Comment
முக்கிய குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு tntrbnews@gmail.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.