சேலம்: "ஆசிரியர் தகுதித் தேர்வை, அரசு ரத்து செய்ய வேண்டும். கற்பித்தல்
பணிக்கு இந்த தேர்வு அவசியமல்ல. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்தை,
வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும்' என, தமிழக
ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.தமிழக ஆசிரியர் கூட்டணியின், சேலம்
மாவட்ட பொதுக்குழு, பயிற்சி கருத்தரங்கு மற்றும் மாநில செயற்குழுக்
கூட்டம், சேலம் விஜயராகவச்சாரியார் ஹாலில் நடந்தது. மாவட்ட தலைவர்
பெரியசாமி தலைமை வகித்தார். அகில இந்திய செயலாளர் அண்ணாமலை பங்கேற்று
பேசினார்.அவர் கூறியதாவது;மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி
உயர்த்தியதையடுத்து, மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி
உயர்த்தப்பட்டுள்ளதால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என, 18 லட்சம் பேர்
பயனடைகின்றனர். தமிழக முதல்வருக்கு, ஆசிரியர் சங்கம் சார்பில் நன்றியை
தெரிவித்து கொள்கிறோம். முதுகலை ஆசிரியர் தேர்வை, ஆன்லைன் மூலம் கொண்டு
வந்தது வரவேற்கத்தக்கது.மத்திய அமைச்சரவை, காப்பீட்டுத் திட்டத்தில் புதிய
மாற்றத்தை உருவாக்கியுள்ளது. ஆசிரியர்களுக்கு இதனால் மிகுந்த பாதிப்பு
ஏற்படும். இதை உடனடியாக திரும்ப பெறாவிட்டால், நாடாளுமன்றம் முன்
ஆர்ப்பாட்டம் நடத்துவோம். மருத்துவ மேற்படிப்புக்கு தேசிய பொது
நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை வாபஸ் வாங்க வேண்டும். இந்த
பிரச்னையில், தமிழக முதல்வருக்கு, ஆசிரியர் சங்கம் பக்கபலமாக
இருக்கும்.கற்பித்தல் திறனுக்கு எதிரான ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து
செய்ய வேண்டும். ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதால், மாணவர்களின் கல்வி
பாதிக்கிறது. போட்டி தேர்வு ஊழலுக்கு வழிவகுக்கும். எனவே, தகுதித்தேர்வை
ரத்து செய்து, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையிலேயே பணியிடங்களை
நிரப்ப வேண்டும். இதை வலியுறுத்தி, தொடர் போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு
செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.மாநில தலைவர் முருகேசன்,
பொதுச்செயலாளர் வின்சென்ட்பால்ராஜ், பொருளாளர் நம்பிராஜ், மாவட்ட செயலாளர்
சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
முக்கிய குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு tntrbnews@gmail.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.