தமிழக அரசு வியாழக்கிழமையன்று 20,000 பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நியமன
ஆணையை வழங்கியுள்ளது வரவேற்பையும் விமர்சங்களையும் பெற்றுள்ளது.
பல
காலமாக தமிழகப் பள்ளிகளில் உள்ள வெற்றிடங்களை இதன் மூலம் நிரப்ப முடியும்
என்று ஒரு சாரார் வாதிட்டாலும், அது உரிய பலனை கொடுக்குமா என்றும்
கேள்விகள் எழுந்துள்ளன.
நீண்டகாலமாக வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததே மிகவும் வருத்தமளிக்கும் விஷயம் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.
பள்ளிப் பருவம் தொடங்கும் ஜூன் மாதம் இந்த
நியமனங்கள் நடைபெற்றிருந்தால் அது மாணவர்களுக்கு கூடுதல் பலனை
அளித்திருக்கும் என்று கூறும் கல்வியாளர் எஸ் எஸ் ராஜகோபாலன், டிசம்பர்
மாதம் அது நடைபெற்றுள்ளது எந்த வகையில் இந்த ஆண்டு மாணவர்களுக்கு பலனைத்
தரும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய அரசின் சட்டப்படி மாணவர்களுக்கு ஆண்டுக்கு
200 நாட்கள் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், பல
பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் வகுப்புகள் நடைபெறாமல் இருப்பது ஒரு உரிமை
மீறல் செயல் எனவும் அவர் கூறினார்.
தமிழக அரசு இந்தப் பணி நியமனம் வழங்கும் நிகழ்வை
விளம்பரப்படுத்த செலவழித்த தொகைக்கு, ஒரு மாவட்டத்துக்கு முழுமையான கல்வியை
கொடுக்க முடியும் எனவும் கூறுகிறார் ராஜகோபாலன்.
கல்விப்பணிக்கு என்று மத்திய அரசு, மாநில
அரசுகளுக்கு நிதியளித்து வருவதை சுட்டிக்காட்டும் அவர், அதன் மூலம் கற்றல்,
கற்பித்தல் நடவடிக்கையை மேலும் சிறப்பாக முன்னெடுக்க முடியும் எனவும்
வாதிடுகிறார்.
இந்திய உச்சநீதிமன்றம் இந்தியாவிலுள்ள
அனைவருக்கும் கண்ணியத்தோடு வாழும் உரிமை என்று தீர்ப்பளித்துள்ளபோது,
கண்ணியத்தை தருகின்ற ஒரு கருவி கல்வி எனவும் அது தெள்ளத் தெளிவாக
கூறியுள்ளதாகவும் பிபிசி தமிழோசையிடம் ராஜகோபாலன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
முக்கிய குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு tntrbnews@gmail.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.