NEWS :
TRBNEWS Welcomes You

06 January 2013

தகுதி தேர்வு ரத்து கோரி ஆசிரியர்கள் போராட்டம்

ஆசிரியர் தகுதி தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி நெல்லையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தர்ணா செய்தனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆசிரியர் தகுதி தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு மாறுதலை உண்மையாக நடைமுறைப்படுத்த வேண்டும். 6வது ஊதியக்குழுவில் அறிவிக்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் தமிழக அரசு, ஆசிரியர்களுக்கு அதே தகுதி தேதி முதல் வழங்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் தவணை தொகை யை குறைக்க வேண்டும். பகுதி நேர தொழிற் கல்வி ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாளை ஜவஹர் திடலில் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தர்மராஜ் பிராங்ளின் முன்னிலை வகித்தார். தர்ணாவில் 500க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியை கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

முக்கிய குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு tntrbnews@gmail.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.