பதிவு மூப்பு அடிப்படையில் 1080 முதுகலை ஆசிரியர் தேர்வு
சென்னை: வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் 1080 முதுகலை ஆசிரியர்களுக்கு நாளை மற்றும் 16ம் தேதிகளில் கலந்தாய்வு நடக்கிறது என்று பள்ளி கல்வி இயக்குநர் தேவராஜன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனத்திற்கு வேலைவாய்ப்பக பதிவு முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 1080 முதுகலை ஆசிரியர்களுக்கு நியமன ஆணைகள் வழங்குவதற்கான கலந்தாய்வு இரண்டு கட்டமாக நடத்தப்பட உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலி பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 15ம் தேதி காலை 10 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறும். இக்கலந்தாய்வில் அந்தந்த மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். சென்னை, மதுரை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காலிப்பணி இடங்கள் இல்லை.
இந்த மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களும் 15ம் தேதி கலந்தாய்வில் கலந்து கொண்டு சொந்த மாவட்டங்களில் பணி இடம் கிடைக்காதவர்களும் சொந்த மாவட்டத்தில் பணி புரிய விருப்பம் இல்லாதவர்களும் வேறு மாவட்டத்தில் பணி புரிய விரும்புகிறவர்களும் 2ம் கட்டமாக 16ம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லுரி மேல்நிலை பள்ளியில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கலாம். இந்த கலந்தாய்வு முற்றிலும் இணைய தளம் மூலம் மட்டுமே நடைபெறும். நியமன ஆணை பெற்றவர்கள் அனைவரும் வரும் 17ம் தேதி அன்றே பணியில் சேர்வதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
முக்கிய குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு tntrbnews@gmail.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.