திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் பல ஆண்டுகாலம் ஆசிரியர்களாகப் பணிபுரிந்தவர்கள் மீண்டும் ஒரு
தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே பணி புரிய
வாய்ப்புள்ளவர்கள் என்பது போன்ற ஒரு நிலைமையை தமிழக அரசு உருவாக்கியது
மனிதநேயக் கண்ணோட்டத்தில் தவறான ஒன்றாகும்.
ஆசிரியர்கள், தங்களது அறிவுத் திறனை - நவீனமயப்படுத்திக் கொள்ளுதல் அவசியம் - தற்காலத் தேவைக்கேற்ப Updating their knowledge and Skills என்பது முக்கியம்தான் என்பதை நாம் மறுக்கவில்லை. அதற்கான பயிற்சிகளை ஆசிரியப் பணியில் நீடித்தே அவ்வப்போது கொடுக்கலாமே!
அதை விட்டுவிட்டு அவர்களை மற்றொரு ‘புதுவகை
நுழைவுத் தேர்வை’ எழுதி தேர்வெனும் தடை ஓட்டப் பந்தயத்தில் கலந்து தாண்டி
ஜெயித்துக் காட்டுங்கள் என்பது விரும்பத்தக்கதல்ல. பணி அனுபவம்
வாய்ந்தவர்களுக்குக் குறிப்பிட்ட கால அவகாசம் தந்து, அதற்குள் அவர்கள்
தங்கள் ஆற்றலை வளர்த்துக் கொண்டு, போட்டியிடலாம் என்று அரசு ஆணையிடலாம்.
அப்படித் தகுதி பெற்றவர்கள் (Department test எழுதி கூடுதல் தகுதி பெற்றவர்களாகி வாருங்கள் என்று ஆணை பிறப்பித்து) அப்படி வருகின்றவர்கள் அதன் அடிப்படையில் பதவி உயர்வு, ஊக்க போன° என்று வைத்தால் சோம்பிப் பின்தங்கும் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் கடுமையாக உழைத்து முன்னேறவே முயற்சிப்பார்கள்!
இப்படிப்பட்ட பாதிப்புக்குள்ளாவோர் பெரிதும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, கிராமப்புறங்களிலிருந்து வந்து பணியில் சேர்ந்தவர்கள் என்கிறபோது இப்பிரச்சினை சமூகநீதிக் கண்ணோட்டத்தோடும், மனிதநேயத்துடன் கூடிய ஈர நெஞ்சத்துடனும் அணுக வேண்டிய ஒன்று என்பதை, தமிழக அரசுக்குக் குறிப்பாக முதல் அமைச்சர் அவர்களுக்கு நாம் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் மறுபரிசீலனை தேவை. இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
முக்கிய குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு tntrbnews@gmail.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.