புதுடில்லி: கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்காக
நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடு, 2013 மார்ச் மாதத்திற்குப் பிறகு
நீட்டிக்கப்படாது என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பல்லம்
ராஜு கூறினார்.
மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின்,
60வது கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது. மாநில கல்வி அமைச்சர்கள்
மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்ற, இந்தக் கூட்டத்தில், மத்திய மனிதவள
மேம்பாட்டுத்துறை அமைச்சர், பல்லம் ராஜு கூறியதாவது:
ஆறு முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு, இலவச மற்றும் கட்டாய கல்வி
அளிப்பதை, அடிப்படை உரிமையாக்கி கொண்டு வரப்பட்டது, "குழந்தைகளுக்கான,
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009 இந்த கல்வி உரிமைச்
சட்டத்தை, அனைத்து மாநிலங்களும், 2013 மார்ச் மாதத்திற்குள் அமல்படுத்த
வேண்டும் என, காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தை அமல்படுத்த, சில மாநிலங்கள் தயார் நிலையில் இல்லை என,
தெரிவித்தாலும், காலக்கெடு நீட்டிக்கப்படாது. இந்த விஷயத்தில், சட்டத்தை
தளர்த்தும் பேச்சுக்கே இடமில்லை.சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும்,
"கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக்
கூடாது&' என, வலியுறுத்தி வருகின்றனர்;
அப்படி நீட்டித்தால், சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது மேலும்
காலதாமதமாகும் என, கூறுகின்றனர். எனவே, இந்த விஷயத்தில், இனியும் கால
நீட்டிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.மேலும், கல்வி உரிமை சட்டத்தை, பாலர்
பள்ளிகள் மற்றும் மேல்நிலைக் கல்விக்கும் நீட்டிக்க வேண்டும் என,
கல்வியாளர்களும், மாநில கல்வி அமைச்சர்களும் வலியுறுத்தியுள்ளனர். அது
தொடர்பாக இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படாது; விரிவாக ஆலோசனை நடத்திய
பிறகே முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு பல்லம் ராஜு கூறினார்.
No comments:
Post a Comment
முக்கிய குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு tntrbnews@gmail.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.