புதுடெல்லி, ஜன. 22-
அரியானா மாநிலத்தில் லோக் தளம் கட்சி தலைவர் ஓம்பிரகாஷ் சவுதாலா முதல்-மந்திரியாக இருந்த போது கடந்த 2000-ம் ஆண் டில் 3 ஆயிரத்து 206 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். போலி ஆவணங்கள் தயாரித்து, லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு 3 ஆயிரத்து 206 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
அரியானாவில் பா.ஜ.க. - லோக் தளம் கூட்டணி ஆட்சி தோற்று காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டதும் இது பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டது. சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் ஆசிரியர் தேர்வில் ஊழல்கள் நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சவுதாலா, அவர் மகன் அஜய் சவுதாலா உள்பட 55 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிறகு 55 பேர் மீதும் கடந்த 2008-ம் ஆண்டு சி.பி.ஐ. குற்றப்பத் திரிக்கையை தாக்கல் செய்தது.
டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. கடந்த வாரம் புதன்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு வெளியிடப்பட்டது. சவுதாலா உள்பட 55 பேரும் குற்றவாளிகள் என்று அறி விக்கப்பட்டனர். இதையடுத்து சவுதாலா, அவர் மகன் அஜய் சவுதாலா மற்றும் வித்யாதர், சஞ்சீவ்குமார் ஆகிய 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 55 பேரும் கைது செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இரண்டு நாட்களுக்கு முன்பு ஓம் பிரகாஷ் சவுதாலா, தனக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக கூறியதால், அவர் டெல்லியில் உள்ள ஜி.பி.பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சவுதாலா உள்பட 55 பேருக்கும் என்னென்ன தண்டனை என்ற முழு விவரம் இன்று (22-ந்தேதி) அறிவிக்கப்படும் என்று சி.பி.ஐ. நீதிபதி கூறி இருந்தார். இதற்காக குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 55 பேரும் இன்று காலை 10 மணிக்கு சி.பி.ஐ. கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். ஓம்பிரகாஷ் சவுதாலா முக்கிய குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால் அவருக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. அதை உறுதிபடுத்துவது போல இன்று நீதிபதி தீர்ப்பை வெளியிட்டார்.
சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி வினோத்குமார் 11.40 மணிக்கு தீர்ப்பை வாசித்தார். ஓம்பிரகாஷ் சவுதாலா, அஜய் சவுதாலா இருவரும் ஊழல், முறைகேடுகள் செய்ததற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதால் அவர்கள் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான சஞ்சீவ்குமார், வித்யாதர், செர்சிங் பத்சமி உள்பட 7 பேருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்குவதாக நீதிபதி அறிவித்தார். மொத்தம் 9 பேர் 10 ஆண்டு தண்டனை பெற்றுள்ளனர். மற்ற 46 பேருக்கும் 3 முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
சவுதாலா மீது ஊழல் தடுப்புப் பிரிவு சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 4 தடவை முதல்வராக இருந்த சவுதாலாவுக்கு 78 வயது ஆவதாலும், அவர் உடல் நலகுறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாலும் அவருக்கு குறைந்த தண்டனை வழங்குமாறு அவரது வக்கீல் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி அதை ஏற்க மறுத்து விட்டார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி ஒருவர் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஜெயில் தண்டனை பெற்றால் அவர் அடுத்த 6 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது. அதன்படி ஓம் பிரசாஷ் சவுதாலாவும், அவர் மகன் அஜய் சவுதாலாவும் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. அஜய் சவுதாலா தற்போது அரியானாவில் எம்.எல்.ஏ. ஆக உள்ளார். 10 ஆண்டு ஜெயில் தண்டனை தீர்ப்பு மூலம் அவரது எம்.எல்.ஏ. பதவிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
சி.பி.ஐ. கோர்ட்டு தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்தால் மட்டுமே அஜய் சவுதாலா எம்.எல்.ஏ. பதவியில் நீடிக்க முடியும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு சவுதாலாவும், அஜய் சவுதாலாவும் தங்கள் தண்டனையை எதிர்த்து மேல் கோர்ட்டில் அப்பீல் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். இதற்கு முன்பு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அரசியல் வாதிகளில் பங்காரு லட்சுமணன், சுக்ராம் ஆகியோர் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்று தேர்தலில் போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
தற்போது ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கும், அஜய் சவுதாலாவுக்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. சவுதாலாவுக்கு 10 ஆண்டு தண்டனை என்ற தகவல் பரவியதும் அரியானா மாநிலம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். அரியா னா முதல்-மந்திரி புபீந்தர் கூடா வீடு முன்பு கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டனர். ஆசிரியர் தேர்வு ஊழலில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளதால் கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 3206 ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது. இதுபற்றி அரியானா மாநில கல்வி மந்திரி கீதா கூறுகையில்,
சி.பி.ஐ. நீதிபதி தீர்ப்பை முழுமையாக படித்து விட்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதற்கிடையே சவுதாலாவின் மற்றொரு மகன் அபய்சிங் கூறுகையில், மத்திய அரசு சி.பி.ஐ.யை பயன்படுத்தி என் தந்தையை பழி வாங்கியுள்ளது. அரசியல் ரீதியாக என் தந்தை செல்வாக்கை கண்டு மிரட்ட காங்கிரசார் இப்படி குறுக்கு வழியை கையாண்டுள்ளனர் என்றார்.

No comments:
Post a Comment
முக்கிய குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு tntrbnews@gmail.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.